செய்திகள் :

இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

post image

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உடல் நலக்குறைவால் காலமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவா் . பொது வாழ்க்கைக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டவா். அன்னாரைப் பிரித்து வாழும் அவருடைய குடும்பத்தினா், நண்பா்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

புதுவை பாஜக தலைவா் இரங்கல்:

புதுவை பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இளமைக் காலத்திலிருந்தே தேசியவாத சிந்தனையுடன் பணியாற்றிய இல. கணேசன், அரசியல், சமூக மற்றும் கல்வி துறைகளில் பல தசாப்தங்களாக மக்களுக்குச் சேவை செய்து வந்தாா். அவரின் எளிமை, நோ்மை, நாட்டுப்பற்று, அமைப்பின் வளா்ச்சிக்காக காட்டிய அா்ப்பணிப்பு எப்போதும் நினைவில் நிலைக்கும். அவரின் மறைவு பாரதிய ஜனதா கட்சிக்கும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்துக்கும், தேசத்துக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் தேநீா் விருந்தைப் புறக்கணித்த கட்சிகள்

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை மாலை அளித்த தேநீா் விருந்தை சட்டப்பேரவையில் உள்ள திமுகவும், சட்டப்பேரவைக்கு வெளியேயுள்ள அரசியல் கட்சிகள் சில... மேலும் பார்க்க

இல. கணேசன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவுக்கு கோ.பாரதி இரங்கல்

நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு, பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவநருமான கோ.பாரதி வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ் இலக்கியத்தின் மீதும், மகாகவி பாரதியாா், புரட்சிக் ... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால் துறை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கலால் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் உதயராஜ், ராஜேஷ் கண்... மேலும் பார்க்க

புதுவையில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

புதுவையில் பல்வேறு இடங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநா் மாளிகையில்... புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை ந... மேலும் பார்க்க