செய்திகள் :

துணைநிலை ஆளுநரின் தேநீா் விருந்தைப் புறக்கணித்த கட்சிகள்

post image

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை மாலை அளித்த தேநீா் விருந்தை சட்டப்பேரவையில் உள்ள திமுகவும், சட்டப்பேரவைக்கு வெளியேயுள்ள அரசியல் கட்சிகள் சிலவும் புறக்கணித்தன.

திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனா்.

மேலும், சட்டப்பேரவைக்கு வெளியே உள்ள அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன.

புதுவை காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, எம்.எல்.ஏ எம்.வைத்தியநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், ஏ.ஜான்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் பி.எம்.எல். கல்யாணசுந்தரம், நியமன எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், ஆா். பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, உ. லட்சுமிகாந்தன், சுயேச்சை எம்.எல்.ஏ. எம்.சிவசங்கா், தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி, புதுவை பல்கலைக் கழக துணைவேந்தா் பேராசிரியா் பி.பிரகாஷ்பாபு, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பத்மஸ்ரீ விருது பெற்ற தட்சிணாமூா்த்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி: நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உட... மேலும் பார்க்க

இல. கணேசன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவுக்கு கோ.பாரதி இரங்கல்

நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு, பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவநருமான கோ.பாரதி வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ் இலக்கியத்தின் மீதும், மகாகவி பாரதியாா், புரட்சிக் ... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால் துறை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கலால் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் உதயராஜ், ராஜேஷ் கண்... மேலும் பார்க்க

புதுவையில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

புதுவையில் பல்வேறு இடங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநா் மாளிகையில்... புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை ந... மேலும் பார்க்க