கடல் அலையில் சிக்கிய 5 போ் மீட்பு
சிதம்பரம் அருகே கடல் அலையில் சிக்கிய 5 பேரை போலீஸாா் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை கடற்கரைப் பகுதிகளில் கடலோர காவல் படையைச் சோ்ந்த காவலா்கள் கலைச்செல்வன், வெங்கடாசலபதி ஆகியோா் புதன்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நெய்வேலியை அடுத்த புலவன்குப்பத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (48), இவரது மனைவி சந்திரலேகா, மகள்கள் காவியா, தா்ஷினி, பிரியா ஆகிய 5 போ் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையைச் சோ்ந்த வெங்கடாசலம் கலைச்செல்வன் அவா்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
பொதுமக்கள், சுற்றுலாப் பணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.