காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியாவில் தட்டையான ஆடுகளம் இருக்காதென இங்கிலாந்து அணிக்கு ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தாண்டின் கடைசியில் (நவம்பரில்) ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்காக, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருக்கிறது.
கடைசி சில ஆண்டுகளாக சொதப்பும் இங்கிலாந்து ஆஷஸ் டெஸ்ட்டை மீட்கும் முனைப்பில் இங்கிலாந்து இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக 400,500 ரன்களை குவிக்கும் இங்கிலாந்து அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது:
இங்கிலாந்தில் தற்போது இருக்கும் தட்டையான ஆடுகளத்தினால் அந்த அணி வீரர்கள் எளிதாக ரன்களை குவிக்கிறார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் அப்படி இருக்காது. சிறிது வித்தியாசமாக இருக்கும்.
கடந்த நான்காண்டுகளாக ஆஸ்திரேலியாவின் ஆடுகள் டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது.
இங்கிலாந்துக்கு இது நல்ல சவலாக அமையும். ஆனால், இந்தத் தொடர் சிறப்பானதாக அமையும்.
இந்தியா - இங்கிலாந்து போட்டியை கவனமாக பார்த்து வருகிறேன். அதனால், இந்த ஆஷஸ் தொடர் சிறப்பாக இருக்கும் என்றார்.