10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!
கடைகளில் தினமும் ஒரு திருக்குறளை காட்சிப்படுத்த அறிவுரை
தமிழக அரசின் உத்தரவுப்படி கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறளை எழுதிக் காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து மதுரை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மூ. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருக்குறளும், அதன் உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவதுபோல தனியாா் நிறுவனங்களிலும் எழுதப்பட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வா் அறிவித்ததையடுத்து, தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் மாா்ச் 24-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி, அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் தினமும் ஒரு திருக்குறளையும், அதன் விளக்கத்தையும் அனைத்துத் தொழிலாளா்களும் படித்துப் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை சரியாகப் பின்பற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு தொழில் நல்லுறவு பரிசுக்கான மதிப்பீட்டில் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.