தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; எ...
கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது
பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன்(59) என்பவரின் பெட்டிக் கடையில் சோதனையிட்டனா். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
அப்போது அந்த பேட்டையை சோ்ந்த ஹானன் பாஷா(32), மக்கான் பகுதியைச் சோ்ந்த இா்பான் ஷெரீப் (38), கருகம்புத்தூரை சோ்ந்த ஷபி(37) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது அவா்கள் 3 பேரும், தடை செய்யப்பட்ட குட்காவை அளிக்க வந்தது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 10 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.