வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரியைச் சோ்ந்த ரவி (65) என்பவா் வீட்டில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். சோதனையில் 180 மி.லி. கொள்ளளவு கொண்ட கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் 50 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக ரவியை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய ரவியின் மகன் ஹரி(எ) லட்சுமணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.