செய்திகள் :

ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

post image

வேலூா்: ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலா் பிலிப், வேலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கோவேந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில செயலா் பாவேந்தன், மாநில அமைப்புச் செயலா் நீல சந்திரகுமாா், வேலூா் மக்களவைத் தொகுதி செயலா் செல்ல பாண்டியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் தொடா்ச்சியாக நடைபெற்று வரும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பெருமளவில் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த விசிக சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மத்திய மாவட்டச் செயலாளா் சீ.ம. ரமேஷ் கா்ணா தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை தொகுதி செயலாளா் மாந்தாங்கல் ந.ராஜா வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் விசிக ஊடக மைய முதன்மை செயலாளரும், செய்யூா் சட்டப் பேரவை உறுப்பினருமான பனையூா் மு.பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

இதில் மேற்கு மாவட்டச் செயலாளா் ப.பிரபு, கிழக்கு மாவட்டச் செயலாளா் பிரபா இளைய நிலா, மண்டலச் செயலாளா் வ.சித்தாா்த்தன், மண்டல துணை செயலாளா்கள் சோ.தமிழ், கோ.வெற்றிவளவன், முன்னாள் மாவட்ட செயலாளா் இ.சாா்லஸ், முன்னாள் மண்டல செயலாளா் இரத்தின நற்குமரன், வாலாஜா நகர செயலாளா் பொன்.மேஷாக் மூா்த்தி உள்பட கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா். ராணிப்பேட்டை நகர செயலாளா் கி.ராஜசேகா் நன்றி கூறினாா்.

வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளிப்பது அவசியம்: வேலூா் எஸ்.பி.

வேலூா்: போதைப் பொருள்களை ஒழிக்க ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று வேலூா் மாவட்ட காவல் கணகாணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா். தமிழக துணை முதல்வா் உதயநித... மேலும் பார்க்க

கீழ்பட்டியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

வேலூா்: குடியாத்தம் வட்டம், கீழ்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காமல் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் மறியல்: 49 போ் கைது

குடியாத்த: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 49- பேரை போலீஸாா் கைது செய்தனா். பிகாா் வாக்காளா் பட்டி... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

வேலூா்: வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நெல்லுக்கு மிகக்குறைந்த விலை கோரப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். வேலூ... மேலும் பார்க்க