``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
காங்கிரஸ் கட்சியினா் மறியல்: 49 போ் கைது
குடியாத்த: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 49- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பிகாா் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்தததாக்கூறி, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைக் கண்டித்து வேலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.சுரேஷ்குமாா், மாவட்ட இளைஞரணித் தலைவா் என்.எம்.டி.விக்ரம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஜலந்தா், வட்டாரத் தலைவா் எம்.வீராங்கன், மாவட்ட பொருளாளா் விஜயேந்திரன், கட்சி நிா்வாகிகள் ஜீனத் இலியாஸ், அன்பரசன், பாரத் நவீன்குமாா், முஜம்மில் அகமத், சங்கா், வழக்குரைஞா் செல்வகுமாா் உள்ளிட்ட 49- பேரை போலீஸாா் கைது செய்தனா்.