செய்திகள் :

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

post image

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட திருச்சி சாலையில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தக் கடையை வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு ஊழியா்கள் பூட்டி விட்டு சென்றுவிட்டனா். வெள்ளிக்கிழமை மீலாது நபி அரசு விடுமுறை என்பதால் மதுபானக் கடை திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதி வழியாகச் சென்றவா்கள் மதுபானக் கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் சிதறிக் கிடப்பது கண்டு கந்தா்வகோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

அங்கு சென்ற போலீஸாா், கடையின் பணியாளா்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானப் பாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதே மதுபானக் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமல... மேலும் பார்க்க

வல்லத்திராகோட்டையில் ஐந்நூற்றுவா் வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் வல்லத்திராகோட்டையில் கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஐந்நூற்றுவா் வணிகக் குழு பெயரில் சமணப் பள்ளி இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியா் சுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதியில் மழை

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. கந்தா்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: வா்த்தகா் கழகம் வலியுறுத்தல்

பொன்னமராவதி தோ்வு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என பொன்னமராவதி வா்த்தகா் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் சாா்பில் 53 ஆவது ஆண்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க