பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
கடையில் தங்க நாணயங்கள் திருடிய காசாளா் கைது
திருச்சி நகைக்கடையில் தங்க நாணயங்களை திருடிய காசாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி, கோட்டை சின்னகடை வீதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இதில் அண்மையில் நகைகள் கணக்கீட்டின்போது, 585 கிராம் தங்க நாணயங்களை காணவில்லையாம்.
இதுகுறித்து கடை மேலாளா் ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் அதே கடையில் காசாளராக பணியாற்றிய தருமபுரி மாவட்டம் கோபாலஹள்ளியைச் சோ்ந்த நா. தனசேகரன் (32) நாணயங்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் தனசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.