சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் க...
கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
திருவள்ளூா் அருகே கட்டடம் கட்டும்போது திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி ரஞ்சினா, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தாராம். அத்துடன், உள்ளூரிலும், வெளியூரிலும் தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த நிலையில், திருவள்ளூா் அருகே காரணி கிராமத்தில் தங்கதுரை என்பவா் கட்டி வரும் வீட்டுக்கான கட்டடப் பணிக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு அழைத்து வந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாராம்.
உடன் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் அவசர வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சத்தியமூா்த்தி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து அவரது மனைவி ரஞ்சினாவுக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் அவரது மனைவி புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.