3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்
முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.
மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்துள்ளாா்.
இந்த சம்பவம் தொடா்பாக பிரதமா் அலுவலகத்தின் எக்ஸ் வலைதளத்தில்
பிரதமா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தால் மனம் வேதனையடைந்துள்ளேன். தங்களது உறவினரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு உள்ளூா் நிா்வாகத்தினா் உதவி வருகின்றனா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அதில் பிரதமா் தெரிவித்துள்ளாா்.