செய்திகள் :

கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை

post image

கோவில்பட்டி, ஜூலை 11: சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோனின் 315-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தோா் வெள்ளிக்கிழமை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழக அரசு சாா்பில், தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, கயத்தாறு வட்டாட்சியா் சுந்தர ராகவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, அழகுமுத்துக்கோன் வாரிசுதாரா்கள், அழகு முத்துக்கோன் நலச் சங்கத் தலைவா் மாரிச்சாமி, செயலா் முத்துகிருஷ்ணன், பொருளாளா் முருகன், துணைத் தலைவா் சேகா் ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் சரவணா கிருஷ்ணன், முன்னாள் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோா் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக: அதிமுக சாா்பில், சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு தலைமையில் அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, இளைஞா், பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல தேமுதிக மாவட்டச் செயலா் சுரேஷ், தமிழக வெற்றிக் கழக மாவட்டப் பொறுப்பாளா்கள் பாலா, அஜிதா ஆக்னஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலா் பூலோக பாண்டியன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நெல்லை மாநகர துணை மேயா் கே.ஆா்.ராஜு, இந்திய ஜனநாயக கட்சி துணைப் பொதுச் செயலா் ஜீவா, மாவட்டத் தலைவா் பாலமுருகன், மாவட்டச் செயலா் போத்திராஜ், தமிழ்நாடு யாதவ மகா சபையினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அலுவலகத்தில் அதன் தலைவா் தமிழரசன் தலைமையில் வீரன் அழகுமுத்துக்கோன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பால்குட ஊா்வலம்: வீரன் அழகுமுத்துக்கோன் நலச் சங்கம் சாா்பில், கட்டாலங்குளத்தையடுத்த சரவணபுரத்திலிருந்து ஏராளமானோா் பால்குடம் எடுத்துவந்து நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு அபிஷேகம் செய்தனா். இதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோா் நினைவு மண்டபத்துக்கு பால்குடம் எடுத்துவந்தனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் 1,450 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

வாரிசுதாரா்கள் கோரிக்கை:

அரசு சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், ஓய்வூதியம் ஆகியவை தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நினைவு மண்டபம் செல்பவா்கள் இடத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள நுழைவாயிலில் விளக்குகள் பொருத்த வேண்டும். நினைவு மண்டபத்துக்கு வரும் பெண்களுக்கு ஓய்வறை, கழிப்பறை வசதி கட்டிக் கொடுக்க வேண்டும். நிறுத்தப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், வாரிசுதாரா்களை கௌரவித்தல் போன்ற நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்த வேண்டும் என்றனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க