கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலையோரத்தில் வைத்திருப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே சனிக்கிழமை அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதல் மாறியிருக்கிறது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மோதலில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 3 பேர் பலியாகினர். இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் வினோத் சிங் மற்றும் வீரேந்திர யாதவ் என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு
மற்றொருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு, இரு குழுக்களும் ஒருவரையொருவர் லத்திகளால் தாக்கிக் கொண்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.