செய்திகள் :

கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்- அதிர்ச்சி சம்பவம்

post image

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் ரோஸ்னி கான். அங்குள்ள காந்தாரி பஜார் பகுதியில் வசித்து வரும் ரோஸ்னி கடந்த சில ஆண்டுகளாக தனது கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு 6 வயதில் சோனா என்ற மகள் இருந்தார். ரோஸ்னிக்கு உதித் ஜெய்ஸ்வால் என்ற காதலன் இருக்கிறார். ரோஸ்னி திடீரென அதிகாலை 3 மணிக்கு போலீஸாருக்கு போன் செய்து தனது மகளை தனது கணவர் ஷாருக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுமியின் உடம்பில் பூச்சிகள் இருந்தன. தற்போது நடந்த கொலை போன்று தெரியவில்லை.

உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் சிறுமி 36 மணி நேரத்திற்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். விசாரணையில் ரோஸ்னியும், அவரது காதலன் உதித் என்பவரும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி விஷ்வஜீத் கூறுகையில்,''ரோஸ்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலன் உதித் ஜெய்ஸ்வால் என்பவருடன் வசித்து வந்துள்ளார். ரோஸ்னியின் கணவர் தனது மகளை பார்க்க இரவு வந்துள்ளார். வீட்டில் அவர் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்துவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். ரோஸ்னி அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். இதையடுத்து காதலன் உதித்தும் போலீஸ் நிலையத்திற்கு வரவைக்கப்பட்டார்.

விசாரணையில் உதித் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரும், ரோஸ்னியும் சேர்ந்து இக்கொலையை செய்துள்ளனர். கணவனை சிறைக்கு அனுப்பவேண்டும் என்று கருதி சோனாவை இரண்டு பேரும் கொலை செய்துள்ளனர். அதோடு சோனாவின் உடம்பு முழுவதும் காயங்களை ஏற்படுத்தி இருந்தனர். சோனாவின் உடலை முன்பு வைத்துக்கொண்டு இருவரும் பார்ட்டி நடத்தியுள்ளனர்'' என்று தெரிவித்தார். ரோஸ்னி தனது கணவரிடமிருந்து வீட்டை பிடுங்குவதற்கு தனது கணவன் மீது போலீஸில் பல்வேறு புகார் கொடுத்துள்ளார். அதோடு கணவர் ஷாருக் பெற்றோர் மீதும் குற்றம் சாட்டி அவர்களை சிறைக்கு அனுப்பியது விசாரணையில் தெரிய

வந்தது.

நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளைய... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; திருச்சியில் சாலை மறியல்! - நடந்தது என்ன?

திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க-வைச் சேர்ந்த மலர்விழி என்பவர் உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே ப... மேலும் பார்க்க

சிசிடிவி கேமரா முன்பே ரூ.1.5 லட்சம் லஞ்சம் - சிக்கிய கோவை இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி!

கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு ரூ.40 லட்சம் ஆண்டு வருமானமாக வருகிறது. ஆனால், கோயிலில் முறையான நிர்வாகம் இல்லை என்று புகா... மேலும் பார்க்க

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க