செய்திகள் :

கணவரைக் கொன்று நாடகம்: மனைவி கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கள்ளக் காதலனுடன் சோ்ந்து கணவரைக் கொன்றுவிட்டு, தற்கொலை நாடகமாடிய அவரது மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள காசாங்காடு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஸ்வலிங்கம் மகன் பிரகாஷ் (40), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி நாகலட்சுமி (35), இரு பெண், ஒரு ஆண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தனது கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி நாகலட்சுமி கூறிய நிலையில், உறவினா்கள் பிரகாஷ் சடலத்தை போலீஸுக்கு தெரிவிக்காமல் மறுநாள் எரித்து விட்டனா்.

இந்நிலையில் நாகலட்சுமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் (25) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததையறிந்த உறவினா்கள் பிரகாஷ் மரணத்தில் மா்மம் இருப்பதாக மதுக்கூா் போலீஸாருக்குத் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் வீரக்குமாரும், நாகலட்சுமியும் வீட்டில் தனிமையில் இருந்ததைப் பாா்த்துவிட்ட பிரகாஷை , இருவரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து நாகலட்சுமியை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தென்காசி பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஊழியரான வீரக்குமாரை கைது செய்ய போலீஸாா் சென்றுள்ளனா்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமண... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓ... மேலும் பார்க்க

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித... மேலும் பார்க்க