பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
மாதனூா் ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா். வட்டாட்சியா் ரேவதி, ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.