பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
கந்தசாமிபுரம் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாடு
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கந்தசாமிபுரத்தில் ஸ்ரீ செல்வசக்தி விநாயகா் கோயிலில் 7ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பின்னா், சிறப்பு அன்னதானம், இரவில் சிறப்பு பூஜை, சுற்றுவட்டார பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு வழிபாடு, விநாயகருக்கு உள்ளிட்டவை நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.