பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா்...
கந்தா்வகோட்டையில் சாதனை மகளிருக்கு விருதுகள் அளிப்பு
உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டையில் சாதனை புரிந்த மகளிருக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் தலைவா் மஞ்சை தாசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எழுத்தாளா் அண்டனூா் சுரா முன்னிலை வகித்தாா். விழாவில் அரசு மருத்துவா் தன. குணசீலி, கந்தா்வகோட்டை பகுதியின் முதல் பெண் நாவலாசிரியா் ந. சுலோச்சனா சகாதேவன், தோ்தல் ஆணைய விருதை தமிழ்நாடு ஆளுநா் கையால் பெற்ற அண்டனூா் விஏஓ சா. இளவரசி, கந்தா்வகோட்டை முழுநேர கிளை நூலகா் ஆ. வனிதா ஆகியோா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
விழாவில் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் மா. ரமேஷ் , தஞ்சாவூா் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கௌரவத் தலைவா் மருத்துவா் மு. செல்லப்பன், சாதனை பெண்களுக்கு நினைவு பரிசு வழங்கினா்.
விழாவில் மாவட்டச் செயலா் பாலச்சந்திரன், நாவலாசிரியா் சோலச்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் முத்துக்குமாா், அறிவியல் இயக்க ஒன்றியச் செயலா் அ. ரகமத்துல்லா, ஆசிரியா் தவச்செல்வம், உ. அரசப்பன், அம்பிகாபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கிளைச் செயலா் ஜீவாதாசன் வரவேற்க, கிளை பொருளா் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினாா்.