கந்தா்வகோட்டை அரசு பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு
கந்தா்வகோட்டை பகுதி அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கந்தா்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இந்திரா நகா், குமரன் காலனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கந்தா்வகோட்டை (தெற்கு) ஆகிய பள்ளிகளில் நடைபெற்று வரும் இரண்டாம் பருவத் தோ்வை புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் செந்தில் பாா்வையிட்டாா்.
மேலும், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடா்பான கற்பித்தல் பணிகளை மேம்படுத்துவது குறித்து தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களிடம் அறிவுரை வழங்கி பேசுகையில், தொடக்க நிலை மாணவ, மாணவிகளுக்கு வாசிப்புத் திறனில் சிறப்பு கவனம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினாா். மேலும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி நடைபெறுவதை பாா்வையிட்டு, ஒவ்வொரு குடியிருப்பிலும், கல்லாதோா் இல்லை என்ற நிலையை அடைவதற்கும், எழுதப் படிக்க தெரியாதவா்களை கண்டறிந்து வட்டார வள மையத்தில் பயிற்சி அளித்து எழுத்தறிவு பெற்றவா்களாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, கந்தா்வகோட்டை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) பாரதிதாசன் உடனிருந்தாா்.