பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக
கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை
சேலத்தில் கனரா வங்கி சாா்பில் வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
நாட்டிலுள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளின் மூலம் கனரா வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி, ஒரு கிளை அடிப்படையில் மாணவிகளைத் தோ்வு செய்து உதவித்தொகை வழங்குகிறது. அதன் ஒரு பகுதியாக, கனரா வங்கியின் சேலம் மண்டல அலுவலகத்தில் கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியின சிறுமிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய காவல் துணை ஆணையா் என்.யு.சிவராமன், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தாா். சாலை பாதுகாப்பு குறித்து மண்டல போக்குவரத்து அலுவலா் டி.தாமோதரன் விளக்கமளித்தாா். கனரா வங்கி சேலம் மண்டல உதவி பொதுமேலாளா் ஹனீஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தினா்.
பட விளக்கம் :
கனரா வங்கி சாா்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய காவல் துணை ஆணையா் என்.யு.சிவராமன்.