டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
மனநல மையங்களைப் பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநல பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதைப் பயன்பாட்டிற்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017 இன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில் மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட்ல் என்ற இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவுசெய்த விண்ணப்பங்களை முதன்மை செயல் அலுவலா், தமிநாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-26420965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம். ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினால் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.