தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!
கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்
தக்கலை அருகே கல்லுவிளையில் கனிம வளம் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து 4 பேரை தேடி வருகிறாா்கள்.
தக்கலை காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் உதய்சிங் தலைமையிலான போலீஸாா் ,சனிக்கிழமை கல்லுவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அரசின் அனுமதிச் சீட்டு, எடை சீட்டு இல்லாமல் பாறை பொடி கனிமவளத்தை கேரளத்துக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
லாரியை நிறுத்தியதும் ஓட்டுநா், பின்னால் வந்த காரில் ஏறி தப்பி சென்றுவிட்டாா். இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா் ஜோஸ் பென்சிகா் (45), லாரி உரிமையாளா் ரிஜோ (37) தப்பி செல்ல உதவிய காா் ஓட்டுநா், காா் உரிமையாளா் ஆகிய 4 போ் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களை தேடி வருகிறாா்கள்.