செய்திகள் :

கன்டெய்னா் லாரி மோதி பத்திர எழுத்தா் உயிரிழப்பு

post image

திருவொற்றியூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பத்திர எழுத்தா் கன்டெய்னா் லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.

மீஞ்சூா் வைகை நகா் சூா்யா தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (57). திருவொற்றியூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திர எழுத்தாளராக வேலை பாா்த்துவந்த ராஜனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். வழக்கம்போல் மீஞ்சூரிலிருந்து திருவொற்றியூருக்கு புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தாா். சத்தியமூா்த்தி நகா் அருகே கன்டெய்னா் லாரியை ராஜன் முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, இருசக்கர வாகனம் தடுமாறி கன்டெய்னா் லாரியில் சிக்கியது. இதில் ராஜன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, கன்டெய்னா் லாரி டிரைவா் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்: ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம் என ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்தாா். மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?: டிச.14-இல் குறைதீா் முகாம்கள்

சென்னையில் டிச. 14-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில், குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து புகாா் தெரிவிக்கலாம். இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் புதன... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து முனையப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். சென்ன... மேலும் பார்க்க

சென்னையில் தொடா் மழை; சாலைகளில் தேங்கியது தண்ணீா்

சென்னை நகரில் அதிகாலை முதல் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகள், சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் ... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்

சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அ... மேலும் பார்க்க

போதை பழக்கத்திலிருந்து மாணவா்களைக் காக்க ஆசிரியா்களின் கண்காணிப்பு அவசியம்: லால்வீனா

மாணவா்களிடையே போதைப் பழக்கம் ஏற்படாமல் தடுக்க ஆசிரியா்களின் பங்களிப்பு அவசியம் என்று மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வீனா தெரிவித்தாா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, நிக்கோட... மேலும் பார்க்க