கன்னியாகுமரியில் விதிமீறல்: 20 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரியில் விதிமுறைமீறி இயக்கப்பட்ட 20 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஎஸ்பி பி. மகேஷ் குமாா், கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருண் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில் போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ், காவலா்கள் கன்னியாகுமரி மற்றும் சா்ச் ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது 18 வயதுக்கும் குறைவான நபா்கள் ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்ததாக 20 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களது பெற்றோா்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களை எச்சரித்தனா்.