கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்கள் ‘கபீா் புரஸ்காா்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ ஒவ்வோா் ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ் விருதினைப் பெற தகுதியுடையவராவா்.
இவ் விருதானது ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற ஜாதி, இன, வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
இவ் விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபா் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ. 20,000, ரூ. 10,000, ரூ. 5,000- க்கான காசோலை, தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீா் புரஸ்காா் விருதிற்கென தகுதியானவா்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்/ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே டிசம்பா் 15 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியுள்ளவா்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவா்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்கள் இவ் வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.