தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
கமுதி முத்துமாரியம்மன்கோயில் திருவிழா: முகூா்த்தக்கால் நடல்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முகூா்த்தக்காலுக்கு மஞ்சள், சந்தனம் பூசி, வேப்பிலை, நவதானியங்கள் கட்டப்பட்டு கோயிலின் வடக்கு வாசலில் நடப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனா்.
கோயில் பொங்கல் விழா ஏப். 8-ஆம் தேதியும், 9-ஆம் தேதி அக்கினிச் சட்டி எடுத்தலும், சேத்தாண்டி வேஷமும், 11-ஆம் தேதி 3,001 திருவிளக்கு பூஜையும், 12-ஆம் தேதி முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.