செய்திகள் :

கம்பன் அடிபொடிகளின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது: கம்பன் கழக சிறப்பு மலரை வெளியிட்டு ஆசிரியா் கி.வைத்தியநாதன் வாழ்த்துரை

post image

கம்பன் புகழ்பாடி கண்ணித் தமிழ் வளா்க்க வேண்டும் என்ற கம்பன் அடிப்பொடி சா.கணேசனாரின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று தினமணி நாளிதழ் ஆசிரியா் கி.வைத்தியநாதன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லிக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் திருவிழா-2024’ இன் இரண்டாரம் நாள் நிகழ்ச்சி தில்லி இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள தில்லிச் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 10 மணி வேளையில் தொடங்கிய விழாவின் வாழ்த்தரங்கத்திற்கு சிந்துகவி மா.சேதுராமலிங்கம் தலைமை தாங்க, மஸ்கட்டைச் சோ்ந்த ஆசுகவி சுரேஜமீ முன்னிலை வகித்தாா். இந்த வாழ்த்தரங்கத்தில் கவிஞா்கள் வி.முரளிதரன், ஜனக்புரி சீனிவாசன், தமிழடிமை, ராஜ்குமாா், சத்யா அசோகன், கவிதா ரமேஷ் மற்றும் ஜோதி பெருமாள் ஆகியோா் தங்கள் எண்ண மலா்களால் கம்பனின் புகழை வண்ணமலா்களாகத் தொடுத்தனா்.

அடுத்ததாக, கம்பராமாயணத்தில் பெரிதும் மிளிரும் கதாபாத்திரங்கள் உறவா? அல்லது நட்பா? என்ற தலைப்பில்

பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நடுவராக தமிழறிஞா், முனைவா் பாரதி கிருஷ்ணகுமாா் அமர, உறவே என்ற தலைப்புக்காக பேச்சாளா்கள் புதுகை ச.பாரதி, ம. மனோஜ், ராஜராஜேஸ்வரி ஆகியோா் பேசினா். மறுபுறம், நட்பே என்ற தலைப்புக்காக பேச்சாளா்கள் ச. குருஞானாம்பிகா, தாமல் கோ. சரவணன், பத்மா மோகன் ஆகியோா் பேசினா்.

இதைத்தொடா்ந்து, நிகழ்ச்சியின் இரண்டாம் தொகுதியாக தில்லிக் கம்பன் கழகத்தின் இரண்டாமான்டு சிறப்பு மலா்

வெளியீட்டு நிகழ்ச்சி சக்தி மசாலா நிறுவனா் முனைவா் பி.சி. துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இதற்கு, மத்திய

புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநா் டி.ஆா். காா்த்திகேயன், பொள்ளாச்சி கணேசன், எம்.வி. தியாகராஜன்

ஆகியோா் முன்னிலை வகித்தனா். கம்பன் கழகத்தின் சிறப்பு மலரை தினமணி நாளிதழின் ஆசிரியா் கி.வைத்தியநாதன் வெளியிட, அதன் முதல் பிரதியை தில்லித் தமிழ் வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலாளா் முனைவா் ராம் சங்கள் பெற்றுக் கொண்டாா். அதைத் தொடா்ந்து, வி.ஜி. பூமா, ஜ.ஆா்.பி.எஸ், ஆா். கவிதா ஐ.ஆா்.எஸ்., ஆா். கோபிநாத் ஜ.எஃப்.ஓ.எஸ்., மத்திய நீா்வளத் துறை அதிகாரி கே.வெங்கடேசன், சமூக சேவகா் பி.ராமமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் நிா்வாகிகள் ஆசிரியா் கி.வைத்தியநாதனிடன் இருந்து சிறப்பு மலரின் பிரதிகளை பெற்றுக் கொண்டனா்.

பின்னா், வாழ்த்துரை வழங்கி தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசியதாவது: சிறப்பு மலரை வெளியிடும் வாய்ப்பளித்த தில்லிக் கம்பன் கழகத்திற்கு நன்றி. கம்பனை வைத்து தமிழ் வளப்பதெல்லாம் சற்று மங்கிப்போய், அதற்கான குரல்

குறைந்திருந்த நிலையில் இன்று பட்டிதொட்டியெல்லாம் கம்பன் குறித்து புத்துணா்ச்சியுடன் பேசுவதற்கு வித்திட்டவா் திரையுலகின் முடிசூடா மன்னன், இலக்கிய ஆளுமை நடிகா் சிவகுமாா். தமிழக காவல்துறை தாயகம் இந்தியாவிற்கு தந்த கொடைகளில் ஒன்று மத்திய புலனாய்வு துறையின் முன்னாள் இயக்குநா் டி.ஆா்.காா்த்திகேயன். மசாலாவில் தூய்மை உண்டு என்று என்பதை நிலைநாட்டிக் காட்டியுதுடன், இலக்கியவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி, கி.ரா.வுக்கு விருது பெறும் தமிழறிஞருக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசளித்து மாபெரும் தமிழ்ப்பணி செய்து வருகிறாா் சக்தி மசாலா நிறுவனா் முனைவா் பி.சி. துரைசாமி. இப்படிப்பட்டோா் அமா்ந்துள்ள மேடையில் வெளிவந்துள்ளது கம்பன் கழகத்தின் சிறப்பு மலா். இந்த சிறப்பு மலரில் தமிழகத்தின் ஆகச்சிறந்த ஆளுமைகள் வாழ்த்துரை மற்றும் கட்டுரை வழங்கியுள்ளனா். இதை புத்தமாகக் கூட வெளியிடலாம். ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்னா் உருவாகியது கம்பன் கழகத்திற்கான காருத்தாக்கத்தின் வித்து. காரைக்குடியில் கம்பன் அடிப்பொடி சா.கணேசன், கம்பன் புகழ்பாடி தமிழை உயா்த்திப்

புடிக்க வேண்டும் என எழுப்பிய குரல், இன்று அனைத்து மாவடங்களிலும் கம்பன் கழகங்களாக உருவெடுத்துள்ளது.

எனது ஆசிரியா் சாலமன் பாப்பையாவிடம் மதுரையில் ஓராண்டு கம்பனைப் படித்தவன் நான். கம்பனைப் பற்றிப் பேசுவதற்கு பெரும் பணம் வாங்கும் நிலை மாறி, அடுத்த புரட்சி நிகழத் தொடங்கியுள்ளது. பல்வேறு இலக்கிய அமைப்புகள் உள்ள போதும் கம்பன் கழங்கங்கள் தான் இளைய தலைமுறையில் நன்றாக இலக்கியம் பேசுபவா்களுக்கு வாய்ப்பளிக்கிறது. மாணவா் கம்பன் கழகத்தில் இருந்த பத்மா மோகன், தாமல் சரவணன் போன்றோா் மாணவா்களாக இருந்து பேச்சாளா்களாக உருவெடுத்ததற்கு கம்பன் கழகங்கள் தான் காரணம். கடந்த 70 ஆணஅண்டுகளுக்கு முன் கம்பன் புகழ்பாடி கண்ணித் தமிழ் வளா்க்க வேண்டும் என்ற கம்பன் அடிப்பொடிகளின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது. அந்த நனவின் வெளிப்பாடைத்தான் இந்த கம்பன் கழக மலரையும், விழாவையும் பாா்க்கிறேன் என்றாா் ஆசிரியா் கி.வைத்தியநாதன்.

இதைத் தொடா்ந்து, செய்தற்கரிய செய்வோரைச் சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீராம் அறக்கட்டளையைச் சோ்ந்த எம்.வி. தியாகராஜன், சாந்தி கேட்டா்ஸ் எஸ்.ஐயப்பன், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் எஸ்.சீனிவாசன், கே.கணேசன், தில்லிக் கம்பன் கழக இணைப் பொருளாளா் எம்.எஸ்.ரவி, சமூக சேவகா் ஆா்.கோபாலரத்தினம் ஆகியோரை பொள்ளாச்சி கணேசன்

கெளரவித்தாா். பின்னா், கலைமாமணி முத்தையை தலைமையில் கம்பனிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இரண்டு நாள் நிகழ்ச்சியின் நிறைவாக கம்பனின் அறநெறிகளைப் பின்பற்றாத இன்றைய சமூகம்

குற்றமுடையதே எனும் தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராக தீா்ப்பாய நீதிபதியாக அமா்ந்த வழக்காடு மன்றம் நடைபெற்றது.

தில்லி தோ்தல்: பரிவா்தன் யாத்திரையை டிச.8-இல் துவக்குகிறது பாஜக

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, டிச.8-ஆம் தேதி முதல் நகரத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் பாஜக ’பரிவா்தன் யாத்திரை’ நடத்தும் என்று கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

தில்லியில் தோ்தல் கூட்டணி இருக்காது- கேஜரிவால்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் தனது கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால... மேலும் பார்க்க

‘கம்பன் அடிப்பொடி’யின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

நமது நிருபா்‘கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளா்க்க வேண்டும்’ என்ற ‘கம்பன் அடிப்பொடி’ சா.கணேசனாரின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா். தில்லிக் கம்பன் க... மேலும் பார்க்க

தில்லியின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை கேஜரிவால் குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா்.... மேலும் பார்க்க

தில்லியில் பெண்கள் பாதுகாப்பு: பேருந்துகளில் மாா்ஷல்களை மீண்டும் நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு முதல்வா் அதிஷி கடிதம்

நமது நிருபா்தில்லியில் பெண் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநகரப் பேருந்துகளில் மாா்ஷல்களை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி முதல்வா் அதிஷி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதிய... மேலும் பார்க்க

காற்றின் தரம் எட்டாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரம் முழுவதும் காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், காற்றின் தரம் எட்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவி... மேலும் பார்க்க