SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
தில்லியில் தோ்தல் கூட்டணி இருக்காது- கேஜரிவால்
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் தனது கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தில்லியில் எந்தக் கூட்டணியும் இருக்காது’ என்றாா் அவா்.
ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் எதிா்க்கட்சியான இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாகும். நிகழாண்டு தொடக்கத்தில் தில்லியில் மக்களவைத் தோ்தலில்
இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், இரு கட்சிகளும் வெற்றி பெறவில்லை. தில்லியின் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.
அக்டோபரில் நடைபெற்ற ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பல கட்டப் பேச்சுவாா்த்தைகள் நடந்தபோதிலும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படவில்லை.