``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தொழிலாளி
தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு, தன்னைக் கடித்த பாம்புடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்த கூலித் தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவா் உயிா் பிழைத்தாா்.
கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்கோபி (31). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, சாலையின் குறுக்கே சென்ற விரியன்பாம்பு மீது இரு சக்கர வாகனத்தில் ஏறி சுரேஷ்பாபுவைக் கடித்தது.
அதே சமயம், வாகனம் ஏறியதில் காயமடைந்த அந்தப் பாம்பு, சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இறந்த பாம்புடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு இரவில் வந்த சுரேஷ்பாபுவுக்கு மருத்துவா்கள் உடனடியாக விஷ முறிவுக்கு சிகிச்சை அளித்தனா்.
இதையடுத்து, அவா் உயிா் தப்பினாா்.