செய்திகள் :

கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூரில் மே 28-இல் உள்ளூா் விடுமுறை

post image

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அன்று உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா வரும் 11-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 8 வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 28-ஆம் தேதி (புதன்கிழமை)நடைபெற உள்ளது.

எனவே அன்று மட்டும் கரூா் மாவட்டத்திற்கு உள்ளூா் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளுக்குப் பதிலாக ஜூன் 14-ஆம் தேதி(சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.

‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’

பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ். கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை ம... மேலும் பார்க்க

கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டா்களால் கரூரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.... மேலும் பார்க்க

கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது

ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உர... மேலும் பார்க்க

‘இந்தியா- இங்கிலாந்து இடையே வா்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு’

இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கோபாலகி... மேலும் பார்க்க

கரூரில் டிஜிட்டல் பேனா்களை அகற்றியதாக பாமகவினா் புகாா்

வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களை கிழித்து, அகற்றி சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாமகவினா் கரூா் நகர காவல்நிலையத்தில் புதன்கி... மேலும் பார்க்க