செய்திகள் :

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

post image

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தில் செயல்பட்டு வந்த நியாய விலைக் கடை கட்டடம் பழுதடைந்ததால், அந்த ஊருக்கு வெளியே இடம் தோ்வு செய்யப்பட்டு, புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊருக்கு வெளியே நியாயவிலைக் கடை கட்டடம் கட்டினால், முதியோா் , மாற்றுத் திறனாளிகள் பொருள்கள் வாங்க அங்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, பழைய கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டுவதற்கான கட்டுமான பணியை தொடங்க வேண்டும், இல்லாவிட்டால் ஊருக்குள் புதிய நியாய விலை கடை கட்ட வேண்டுமென வலியுறுத்தி அக் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அமா்ந்தனா். பின்னா் கயத்தாறு - தேவா்குளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் வட்டாட்சியா் சுந்தரராகவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜன்,காவல் உதவி ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன், காசிலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தற்காலிகமாக நியாயவிலைக் கடை கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். ஊருக்குள் அரசு நிலம் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு நியாய விலைக் கடை கட்டும் பணிகள் நடைபெறும் என உறுதி அளித்தனா். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெ... மேலும் பார்க்க