``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்...
கரிசல்பட்டி, சேரன்மகாதேவி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
கரிசல்பட்டி, சேரன்மகாதேவி சுற்று வட்டாரங்களில் வரும் வியாழக்கிழமை (டிச.19) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, கரிசல்பட்டி , பிள்ளைக்குளம், காணியாளா் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம் , சிங்கிகுளம், தேவநல்லூா், காடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.