கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்: முன்னாள் அமைச்சா் பாராட்டு
கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கும்பகோணத்தை உள்ளடக்கிய ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தின் திருக்குவளையில் தோன்றி திமுகவுக்காக உழைத்தவரும், தமிழகத்தின் நலனுக்காக செயலாற்றியவருமான முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் வி.வி.சுவாமிநாதன்.