பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் வருவாய்த் துறையினா் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வழங்க வேண்டும். முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றும் 42 ஆயிரம் அலுவலா்களும் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த் துறையினா் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அக்டோபா் 3-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அக்டோபா் 10-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.