செய்திகள் :

கருப்பு டீசர்: 'என் பேரு சரவணன்; எனக்கு இன்னொரு பேரு இருக்கு' - RJB-யின் ஃபேன் பாய் சம்பவம்

post image

நடிகர் சூர்யா பிறந்தநாளான இன்று அவரது நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனப் பன்முக திறமை கொண்ட கலைஞர் ஆர்.ஜே பாலாஜி.

தானே நாயகனாக நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஜே பாலாஜி கருப்பு படத்தின் மூலம் முதன்முறையாக மற்றொரு நாயகனின் படத்தை இயக்கியுள்ளார்.

சூர்யா
சூர்யா

இந்த படத்தில் ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவு மற்றும் விக்ரம் மோர் சண்டை பயிற்சி இயக்கத்தில் பணியாற்றியுள்ளனர். கலையரசன் படத்தொகுப்பில் பணியாற்றியுள்ளார்.

2கே கிட்ஸ்களின் சென்ஷேஷனான சாய் அபயங்கர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதில் சூர்யாவுடன் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், 'லப்பர் பந்து' சுவாஸ்விகா, 'நெடுஞ்சாலை' ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர்.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சூர்யாவை மட்டுமே முன்னிறுத்தி வெளியிடப்பட்ட டீசரில், ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களை போல அவர் வழக்கறிஞராக நடிப்பது வெளிப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆக்க்ஷன் கதையில். மேலும் சூர்யாவின் கஜினி பட ரெஃபரன்ஸும் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் இது ஒரு ஃபேன் பாய் சம்பவம் என கொண்டாடி வருகிறார்கள்.

கருப்பு டீசர்:

D54: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்; பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். வருகிற 28ம் தேதி தனுஷின் பிறந்த நாள் வருவதால், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ரெடியாகி வருகின்றனர்.தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது... மேலும் பார்க்க

தலைவன் தலைவி விமர்சனம்: காதலும் மோதலுமான கணவன் - மனைவி! எப்படி இருக்கு இந்த கமெர்சியல் பரோட்டா?

மதுரை ஒத்தக்கடையில் ஹோட்டல் நடத்திவரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவர் மனைவி பேரரசி (நித்யா மெனேன்). இவர்கள் இருவருக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளால் இருவீட்டாரும் தலையிட, பிரிவின் எல்லைக்குப் ப... மேலும் பார்க்க

What to watch - Theatre: தலைவன் தலைவி, மாரீசன், Hari Hara Veera Mallu, Fantastic 4; இந்த வார ரிலீஸ்!

தலைவன் தலைவி (தமிழ்)விஜய் சேதுபதி, நித்யா மெனன் - தலைவன் தலைவிபாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவன் தலைவி'. புரோட்டோ கடை வ... மேலும் பார்க்க