செய்திகள் :

What to watch - Theatre: தலைவன் தலைவி, மாரீசன், Hari Hara Veera Mallu, Fantastic 4; இந்த வார ரிலீஸ்!

post image

தலைவன் தலைவி (தமிழ்)

விஜய் சேதுபதி, நித்யா மெனன்
விஜய் சேதுபதி, நித்யா மெனன் - தலைவன் தலைவி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவன் தலைவி'. புரோட்டோ கடை வைத்து நடத்திவரும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருக்குமிடையே நடக்கும் கலாட்டா நிறைந்த திருமணத்திற்குப் பிறகான காதல் கதையான இது ஜூலை 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மாரீசன் (தமிழ்)

மாரீசன்
மாரீசன்

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் ஃபகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் திரைப்படம் 'மாரீசன்'.

நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு ஃபகத், வடிவேலு இருவரும் பைக்கில் பயணமாகிறார்கள். திருடனாக இருக்கும் ஃபகத், வடிவேலுவிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க அவருடனே செல்ல நேரிடுகிறது. அடிக்கடி எல்லாவற்றையும் மறந்துவிடும் மறதியுடைய வடிவேலுவுடன் ஃபகத் மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் தவிக்கிறார். இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடக்கிறது. இந்தப் பயணம் இருவரின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.

ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இலகுவான திரைப்படமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Hari Hara Veera Mallu - Part 1 Sword vs Spirit (தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம்)

Hari Hara Veera Mallu திரைப்படம்

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Hari Hara Veera Mallu'. ஹரி ஹர வீரமல்லு என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் சாகசங்கள்தான் கதைக்களம். இத்திரைப்படம் ஜூலை 24ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

Mahavatar Narsimha (தெலுங்கு, தமிழ், இந்தி)

Mahavatar Narsimha

அஸ்வின் குமார் இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய அனிமேஷன் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

The Fantastic Four: First Steps (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)

The Fantastic Four: First Ste

மாட் ஷக்மேன் இயக்கத்தில் பெட்ரோ பாஸ்கல், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் க்வின், ஜூலியா கார்னர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Fantastic Four: First Steps'.

சூப்பர் பவர்களுடன் விளையடும் பேன்டஸி, ஆக்‌ஷன் அட்வன்சர் மார்வெல் திரைப்படமான இது இந்த வாரம் ஜூலை 24ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Fahadh Faasil: "எனக்குப் பிடித்த டாப் 5 படங்கள் இவைதான்" - பகத் பாசில் சொன்ன சூப்பர் லிஸ்ட்

இயக்குநர் சுதிஷ் சங்கர்இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இலகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்க... மேலும் பார்க்க

மாரீசன் விமர்சனம்: ஃபார்மல் டிரஸ் வடிவேலு, பக்கா திருடர் பகத் பாசில்; இந்தப் பயணம் எப்படி?

சிறுசிறு திருட்டுகள் செய்யும் திருடரான தயாளன் (பகத் பாசில்), பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து விடுதலையாகிறார். மீண்டும் திருடுவதற்காக நாகர்கோவிலுள்ள பூட்டிய வீடு ஒன்றில் நுழைய, அங்கே ஓர் அறையில் ... மேலும் பார்க்க

D54: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்; பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். வருகிற 28ம் தேதி தனுஷின் பிறந்த நாள் வருவதால், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ரெடியாகி வருகின்றனர்.தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது... மேலும் பார்க்க