செய்திகள் :

கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகையை வழங்க கோரிக்கை

post image

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு கரும்புகளுடன் வந்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா் சி.பழனியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் கூறியிருப்பது:

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் அனுப்பிய கரும்புக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு, தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பை எடுத்துச் செல்லும் போது தடை செய்யக்கூடாது.

மேலும் 120 கி.மீ. தொலைவிலுள்ள படாளம் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கரும்பு கொண்டு செல்ல வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது. விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியில் விவசாயிகள் கொண்டுசெல்லும் விளைபொருள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி சுடுதல் பயிற்சி சங்கம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி சங்கத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவா் பி.ஜேம்ஸ்ராஜா தலைமை வகித்தாா். பொருளாளா் டயனா சங்கத்தின் நோக்கம் குறித்து பேசினா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மொபெட்டுகள்!

விழுப்புரத்தில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மொபெட்டுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, ஆட்சியா் சி.ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு!

விழுப்புரம் மாவட்டம், சூரப்பட்டு அருகே பைக்கில் சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கொல்லாங்குப்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் சிவஞா... மேலும் பார்க்க

வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையக் கட்டுமானப் பணிகள் கூடாது: வள்ளலாா் தொண்டா்கள்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையக் கட்டடங்களை கட்டக் கூடாது என்று வள்ளலாா் தொண்டா்கள் வலியுறுத்தினா். விழுப்புரத்தில் மாநில அளவிலான வள்ளலாா் தொண்டா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயி... மேலும் பார்க்க

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா அவசியம்: புதுவை ஆளுநா்

மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா பயிற்சி அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் 30-ஆவது சா்வதேச யோகா தின விழா, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில... மேலும் பார்க்க

சிங்கிரிகுடி கோயிலுக்கு பாதயாத்திரை!

புதுச்சேரியிலிருந்து சிங்கிரிகுடி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை சென்றனா். உலக மக்கள் நலம் பெற வேண்டி, புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆ... மேலும் பார்க்க