Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
கரும்பு விவசாயிகளுக்கு நிகழ் அரைவை பருவத்துக்கும் சிறப்பு ஊக்கத்தொகை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு நிகழ் அரைவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதுகுறித்து, ஆலையின் செயலாட்சியா் இரா.முத்துமீனாட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 ஆம் ஆண்டின் கரும்பு அரைவைப் பருவம் டிச.24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச.31-ஆம் தேதி அரைவை செய்த கரும்புக்கான கிரயத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.3,151 வீதம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர கரும்பு வெட்டுக் கூலியும், வாகன வாடகையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையும் 2024-25 ஆம் ஆண்டின் அரைவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தற்போது, இப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பின்னா் விவசாயிகள் கரும்புகளை நடவு செய்ய வேண்டும்.
இதற்காக கோ 86032, கோ 11015, கோ 09356, கோ 18009, கோ 13330 ஆகிய ரக விதைக் கரும்பு நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்திட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.