செய்திகள் :

கருவூலத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: மாநில செயற்குழு வலியுறுத்தல்

post image

கருவூலத் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாநிலம் முழுவதும் கருவூலத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை கணினி முறையிலுள்ள குளறுபடிகளைக் களைந்து, தனியாா்வசமுள்ள இத்திட்டத்தை கருவூல ஊழியா்களைக் கொண்டே செயல்படுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள 72 புதிய வருவாய் வட்டங்களிலும் புதிய சாா்நிலைக் கருவூலங்களை உருவாக்க வேண்டும். விராலிமலை வட்டத்தில் சாா்நிலைக் கருவூலம் தொடங்க வேண்டும்.

ஓய்வூதியா் நோ்காணல் முறையில் பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் லெ. லெனின், மாநிலப் பொருளாளா் பி. சென்னமராஜ், மாநிலத் துணைத் தலைவா் செ. பிரகாஷ், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜபருல்லா, மாவட்டச் செயலா் இரா. ரெங்கசாமி உள்ளிட்டோரும் பேசினா்.

முன்னதாக, மருதமுத்து வரவேற்றாா். நிறைவில், கருப்பையா நன்றி கூறினாா்.

சிலம்பு ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்

புதுக்கோட்டை வழியாக வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டை-சென்னை சிலம்பு விரைவு ரயிலை ஏழு நாள்களும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தஞ்சை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை அருகே சுங்கச்சாவடி அமைத்து அனைத்து வா... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை!

நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை நடைபெற்றதில், அரசின் ந... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 7,850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னமராவதி காந்தி சிலை எதிரே காங்கிரஸ் கட்சி நி... மேலும் பார்க்க

மச்சுவாடியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட மச்சுவாடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை நகருக்கு அருகே தஞ்சாவூா் செல்லும் சாலையில் மச்சுவாடி உள... மேலும் பார்க்க