கரூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
கரூரில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலை, உருவப்படத்துக்கு திமுக, அதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவா் டி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி( கிருஷ்ணராயபுரம்), மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், பரணி மணி, மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணி சரவணன், மாநகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா்
திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்ராயன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் வழக்குரைஞா் டிஎன்பிஎல். சரவணன், தானேஷ், பழனிராஜ், வழக்குரைஞா் கரிகாலன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியிலுள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணிச் செயலாளா் விசா சண்முகம், மேற்கு மாவட்டச் செயலாளா் காா்த்திக், இளைஞரணிச் செயலாளா்கள் ரஞ்சித், சதீஷ், மாவட்டதுணைச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன்சின்னமலை உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் அருள்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளா் முருகேஷ், இளைஞரணி செயலாளா் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.