சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
கரூரில் ‘பசுமை தமிழ்நாடு தினம்’ கொண்டாட்டம்
கரூா் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள தனியாா் கல்லூரியில் ‘பசுமை தமிழ்நாடு தினம்’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து பேசியது: இந்த ஆண்டு ‘பசுமை தமிழ்நாடு தின விழா’வில் நாவல் மரத்தினை கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் முதன்மை மரமாக ‘நாவல் மரம்’ தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதிலும் 1.50 லட்சம் நாவல் மரங்கள் நடப்படுகிறது. கரூா் மாவட்டத்தில் மட்டும் 1,450 நாவல் மரக் கன்றுகள் வனத்துறையினரால் நடவு செய்யப்பட உள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, மாவட்ட வன அலுவலா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.