IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!
கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது
ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உருவாக்கி விற்பனை செய்வதாக கோவை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை காவல் துறைக் கண்காணிப்பாளா் வி. பத்ரிநாராயணன் தலைமையிலான போலீஸாா் கரூரில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது கரூரைச் சோ்ந்த ஜெயக்குமாா், காா்த்திக், நவீன் சேகா், சம்பத், ஸ்ரீனிவாசன் மற்றும் கலைவாணி ஆகியோா் ஆதாா் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளை உருவாக்கியது தெரியவந்தது. இதையடுத்து 130 போலி பான் அட்டைகள், 69 சோ்க்கைப் படிவங்கள், 1 மடிக்கணினி மற்றும் 6 கைப்பேசிகள் மற்றும் பான் அட்டை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற சாதனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இவா்கள் தீவிரவாத கும்பல் கரூரில் தங்க பான் அட்டைகளை உருவாக்கினாா்களா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனா்.