செய்திகள் :

கரூர்: "ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அதுதான் தேர்தல்" - செந்தில் பாலாஜி பேசியது என்ன?

post image

ஈகைப் பண்பையும், நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் பள்ளப்பட்டி நகர தி.மு.க சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

senthil balaji
senthil balaji

அப்போது பேசிய அவர், "பள்ளப்பட்டி மக்கள் அன்போடு பிரியாணி கொடுத்தால், அது திருமண விழா. அதேபோல், நோன்புக் கஞ்சி மற்றும் வடையும் கொடுத்தால் அது ரமலான் திருநாள்.

ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குருபானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே, ஒரே ஒரு ஆடு அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.

எனவே, ஒரு ஆடு அல்ல எத்தனை ஆடு வந்தாலும் பள்ளப்பட்டியில் உள்ளேயும் வர முடியாது. உள்ளே வந்துவிட்டு வெளியேவும் செல்ல முடியாது எனக் கடந்த தேர்தலில் காட்டி உள்ளீர்கள்" எனப் பேசினார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார். அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்... மேலும் பார்க்க

'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

`இந்தநாடு நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டதா?’ - குனால் கம்ரா, ஷிண்டே சர்ச்சை | என்ன பிரச்னை?

மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஹாட் டாபிக், நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவை சுற்றி நடக்கும் விஷயங்கள் தான். ஸ்டாண்ட் அப் காமெடியன் (standup comedian) குனால் கம்ரா, சமீபத்தில் நடைப்பெற்ற காமெடி ஷோ ஒன... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டம்: "ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்கப் பணமில்லையா மனமில்லையா?" - ஸ்டாலின்

'ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?'என்று பாஜக அரசுக்குக் கேள்வி எழுப்பி, ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "காந்த... மேலும் பார்க்க

`எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை!' - அதிமுக, பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலை பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென டெல்லிக்கு விசிட் அடித்து, பாஜக-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து, 45 நிமிட... மேலும் பார்க்க