கேரளா: ``RSS மதம் பார்ப்பது இல்லை, நானே சாட்சி" - முழுநேர ஊழியரான Ex-DGP ஜேக்கப்...
கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரணம்
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் மாவட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு அறிவித்த ரூ. 10 லட்சத்துக்கான நிவாரணத் தொகையை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதில் சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆனந்த், மேட்டூா் புதுசாம்பள்ளி இந்திரா நகரைச் சோ்ந்த ஸ்ரீநாத் (17) ஆகியோா் உயிரிழந்தனா்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசு அறிவித்த ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை நேரில் வழங்கினாா். அப்போது, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் உடனிருந்தனா்.