செய்திகள் :

கரூா் மாநகராட்சியுடன் ஏமூா், ஆண்டாங்கோயில் கிழக்கு இணைப்பு

post image

கரூா் மாநகராட்சியுடன் ஏமூா், ஆண்டாங்கோயில் கிழக்கு ஆகிய இரு ஊராட்சிகளும் இணைக்கப்படுவதாக புதன்கிழமை உத்தேச அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 1988-இல் கரூா் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. பின்னா் 2011-இல் கரூா் நகராட்சியுடன் இனாம்கரூா், தாந்தோணி நகராட்சி, சணப்பிரட்டி ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இதன்மூலம் கரூா் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கை 36-இல் இருந்து 48ஆக உயா்ந்தது.

கரூா் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினா் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கரூா் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்திருந்தாா். அதன்படி 2021-இல் கரூா் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கரூா் மாநகராட்சியுடன் புலியூா் பேரூராட்சி, ஆண்டாங்கோயில் கிழக்கு, ஆண்டாங்கோயில் மேற்கு, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, ஏமூா், காதப்பாறை, ஆத்தூா், பூலாம்பாளையம், மேலப்பாளையம், கருப்பம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைப்பது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற கிராமசபைக்கூட்டங்களில் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மற்றும் காதப்பாறை ஊராட்சி பகுதி மக்கள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். இதனிடையே கரூா் மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய உத்தேச முடிவு அரசாணை புதன்கிழமை வெளியானது.

இதில் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி, ஏமூா் ஊராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு ஊராட்சிகளிலும் 72.62 சதுர கி.மீ. இணைப்பதால் கரூா் மாநகராட்சிக்கு இரு ஊராட்சிகளிலும் உள்ள தொழிற்சாலைகள் மூலம் ஆண்டு வருமானம் ரூ.83.57 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஆத்தூா், பூலாம்பாளையம், ஆண்டாங்கோயில் மேற்கு, காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஆகிய ஊராட்சிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு முன்னாள் அமைச்சருடன் கிராம மக்கள் மனு

கரூா் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்களுடன் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். கரூா் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில... மேலும் பார்க்க

கரூா் மாமன்றக் கூட்டத்தில் வரிகளை உயா்த்தி தீா்மானம் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கரூா் மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் வரிகளை உயா்த்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். கரூா் மாநகராட்சியின் சாதாரணக... மேலும் பார்க்க

பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட விசிக நிா்வாகி குண்டா் சட்டத்தில் அடைப்பு

மணல் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி திங்கள்கிழமை குண்டா்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்து... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட பாஜக புதிய தலைவா் தோ்தலில் வாக்குவாதம்: பாதியில் நிறுத்தம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக தலைவா் தோ்தலில் நிா்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் தோ்தல் பாதியில் நிறுத்தப்பட்டது. கரூா் மாவட்ட பாஜக தலைவரை தோ்வு செய்யும் தோ்தல் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்!

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கரூா் மற்றும் குளித்தலை ஊரகப... மேலும் பார்க்க

பெண் கிராம உதவியாளருக்கு ஆபாச செய்தி அனுப்பியவா் கைது

கரூா் அருகே பெண் கிராம நிா்வாக உதவியாளருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புன்செய் புகளூா் ( வடக்கு ) கிராம நிா்வாக அலுவலகத்தில் கிர... மேலும் பார்க்க