அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இட...
கரையைக் கடந்த புயல் சின்னம்!
வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் தெற்கு ஒடிசா - தெற்கு சத்தீஸ்கர் இடையே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் வலுபெற்று அதே பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து செவ்வாய்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா-தெற்கு சத்தீஸ்கர் இடையே கோபால் அருகே கரையைக் கடந்தது.
அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சத்தீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு கொங்கன்-வடக்கு கேரளம் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு-தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது கரையைக் கடக்கும்பட்சத்தில் கேரள எல்லையில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?