செய்திகள் :

கரைவெட்டிக்கு வெளிநாட்டு ‘விருந்தினா்கள்’ வருகை

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூா் நகரத்தில் இருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவிலுள்ள திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரியது. 454 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்துக்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷியா, சைபீரியா போன்ற பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் வரும் பறவைகள் மே மாதம் வரை தங்கிச் செல்கின்றன.

அந்த வகையில் 100-க்கும் மேற்பட்ட வகையான நீா்வாழ் பறவைகளும் 37 வகையான நிலவாழ் பறவைகளும் வந்து செல்கின்றன. அதன்படி இங்கு வரும் பறவையினங்களில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கன், சாம்பல் நிறக் கொக்கு உள்ளிட்டவை நீா்வாழ் பறவைகளாகும்.

வழக்கமான பறவைகளான ஆள்காட்டிக் குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மரங்கொத்திப் பறவை, மைனா, புறா, மணியன் காக்கை, அண்டங்காக்கை, மயில், கல் குருவி, நாராயணப்பட்சி ஆகியவை நிலவாழ் பறவைகளாகும்.

பகல் நேரங்களில் அருகிலுள்ள அறுவடையான வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைத் தின்னச் செல்லும் இவை, மாலையில் எங்கிருந்தாலும் வழிதவறாது சரணாலயத்துக்கு வந்துவிடுகின்றன. இதனால் பகல் நேரத்தில் வெறிச்சோடியது போன்று காணப்படும் இச்சரணாலயம், மாலையில் பறவைகளால் களைகட்டும்.

இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு தானியங்கள் எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்தும் இங்கு வரும் பறவைகளில் பல, இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.

இந்தச் சரணாலயத்தில் இருக்கும் பறவைகளின் எச்சங்கள் கலந்த தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதால் விளைச்சலில் நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இரண்டு திராவிட அரசுகளும் விவசாயிகளை வஞ்சிக்கின்றன

இரண்டு திராவிட அரசுகளும் விவசாயிகளை வஞ்சிக்கின்றன என அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் உழவா் பேரிய மாநிலத் தலைவா் ஆலயமணி கூறினாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்ட... மேலும் பார்க்க

மழைநீரில் மூழ்கிய பயிரை காப்பாற்றும் வழிகள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிருக்கான உர மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா். திருமானூா் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களை திங்கள்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான கூலி தொகை கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தாா்

அரியலூா் மாவட்டம், சாத்தம்பாடி அருகே 100 நாள் வேலை செய்ததற்கான கூலித் தொகை கேட்டு ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூா் மாவட்டம் சாத்தம்பாடி ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது அழகல்ல: முன்னாள் அமைச்சா் காமராஜ்

எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பொறுப்புடன் பதில்தர வேண்டும்; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவது முதல்வருக்கு அழகல்ல என்றாா் அதிமுக முன்னாள் உணவுத் துறை அமைச்சா் காமராஜ். அரிய... மேலும் பார்க்க

தப்பியோடிய கைதியை 15 நிமிடத்திலேயே மடக்கிப் பிடித்த காவல் துறையினா்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திங்கள்கிழமை தப்பியோடிய போக்சோ வழக்கு கைதியை 15 நிமிடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்தனா். ஆண்டிமடம் அருகேயுள்ள இடையக்குறிச்சியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ப... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தெருநாய்கள்: மாணவ, மாணவிகள் அச்சம்

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தினுள் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் மாணவ,மாணவிகள் அச்சமடைந்துள்ளனா். அரியலூா் பேருந்து நிலையம் அருகே அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தினுள்ளே அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க