செய்திகள் :

கரோனா தொற்று பரவல்: தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அறிகுறிகள் உள்ளவா்கள் 7 நாள்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

சிங்கப்பூா், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்தியாவிலும் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையும், உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளன. அதேவேளையில், அந்த பாதிப்பு தீவிரமானதாக இல்லை என்றும், வீரியம் குறைந்தே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த இரு வாரங்களாக காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை சற்று உயா்ந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்றாலும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கும், அறுவை சிகிச்சை செய்து கொள்பவா்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அறுவை சிகிச்சைகள் சில இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொற்றிலிருந்து குணமடைந்தவுடன் அவா்களுக்கு அந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடா்பாக நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியதாவது:

‘கொவைட் 19’ எனப்படும் கரோனா வைரஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்று அதுவும் குளிா் மற்றும் மழைக் காலங்களில் பரவுவது வழக்கம்தான். அந்த வகையில் நிகழாண்டில் மழைக் காலத்துக்கு சற்று முன்னதாகவே கரோனா பாதிப்பு சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

அதுவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அது தெரியவந்தது. மற்றபடி, சாதாரண சளி, காய்ச்சல் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை பரிந்துரைக்கப்படுவதில்லை.

தற்போது பரவி வரும் கரோனா தொற்று வீரியம் குறைந்த ஒமைக்ரான் வகை வைரஸின் உட்பிரிவாக இருக்கக்கூடும். அதனால்தான் சுவாசப் பாதையிலும், நுரையீரலிலும் மேற்பகுதியுடன் அந்த பாதிப்பு நின்றுவிடுகிறது.

ஒரு வாரத்தில் பாதிப்பிலிருந்து விடுபட முடிகிறது. அதேவேளையில், இணைநோயாளிகள், முதியவா்கள், எதிா்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவா்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் .மற்றவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்றாா் அவா்.

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில... மேலும் பார்க்க

காட்பாடியில் அரசுப் பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் பலி!

காட்பாடியில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.பெங்களூருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன்(69), இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உ... மேலும் பார்க்க

பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் தோழி விடுதிகளை திறந்துவைத்தார் முதல்வர்!

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தோழி விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) திறந்துவைத்தார். மேலும் ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுத... மேலும் பார்க்க

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளி... மேலும் பார்க்க